- Home
- Gallery
- திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு; விஷயம் லீக் ஆனதால் நடிப்பதற்கே தடைவிதிக்கப்பட்ட தமிழ் நடிகை பற்றி தெரியுமா?
திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு; விஷயம் லீக் ஆனதால் நடிப்பதற்கே தடைவிதிக்கப்பட்ட தமிழ் நடிகை பற்றி தெரியுமா?
சினிமாவில் நடிகர், நடிகைகள் இடையே காதல் மலர்வது உண்டு, ஆனால் திருமணமான நடிகர் மீது நடிகை ஒருவர் காதலில் விழுந்ததால் அவரது கெரியரே குளோஸ் ஆகிவிட்டது.

Nikita Thukral
பகத் பாசில் ஹீரோவாக அறிமுகமான கையேதும் தூரத்து என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிகிதா துக்ரல். அப்படம் பிளாப் ஆனதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நிகிதா, விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.
Actress Nikita Thukral
பின்னர் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் போன்ற படங்களில் நடித்த நிகிதாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது சரோஜா படம் தான். வெங்கட் பிரபு இயக்கிய அப்படத்தில் ‘கோடான கோடி’ என்கிற பாடலுக்கு நிகிதா ஆடிய கவர்ச்சி நடனம் வேறலெவலில் ஹிட்டானது.
Nikita Thukral and Darshan
பின்னர் கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைத்த நிகிதா, அங்கு புனீத் ராஜ்குமார், உபேந்திரா, கிச்சா சுதீப் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் யோதா, பிரின்ஸ் போன்ற கன்னட படங்களில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ தர்ஷனுக்கும் நிகிதா துக்ரலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... அப்படி ஒரு வெறித்தனமான காதல்.. ஸ்ரீதேவியிடம் புரோபஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா நடந்ததே வேற..
Nikita Thukral love
அந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி இருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் நடிகர் தர்ஷன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. தர்ஷன் - நிகிதா துக்ரல் இடையேயான காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி போலீஸில் புகார் அளித்தார்.
Nikita Thukral banned
தர்ஷன் தன்னை அடித்து, துன்புறுத்துவதாகவும், அவரை கைது செய்யக்கோரி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தர்ஷனும் கைது செய்யப்பட்டார். மறுபுறம் நடிகை நிகிதா துக்ரல் கன்னட சினிமாவில் நடிக்க தடைவிதிக்க வலியுறுத்தியும் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
Nikita Thukral and darshan Affair
அதன் அடிப்படையில் நடிகை நிகிதா துக்ரல் கன்னட சினிமாவில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் மீதான தடை நீக்கப்பட்டாலும் மார்க்கெட் போனதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடிய நிகிதா, கடந்த 2017-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். தர்ஷன் விவகாரத்துக்கு பின் நிகிதா சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 28 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆன இந்தியன்! தீவிர ரசிகனாக வந்து கமல் பேனருக்கு பாலாபிஷேகம் செய்த பிரபல நடிகர்