- Home
- Gallery
- அப்படி ஒரு வெறித்தனமான காதல்.. ஸ்ரீதேவியிடம் புரோபஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா நடந்ததே வேற..
அப்படி ஒரு வெறித்தனமான காதல்.. ஸ்ரீதேவியிடம் புரோபஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா நடந்ததே வேற..
ரஜினிகாந்தின் சொல்லப்படாத காதல் கதை பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் படம் இப்போதும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது..
தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர்.
தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார். ஆனால் ரஜினிகாந்தின் சொல்லப்படாத காதல் கதை பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
Rajinikanth
ரஜினிகாந்த் பல முன்னணி நடிகைகளுடன் நடித்தார், ஆனால் ஸ்ரீதேவியுடனான அவரது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் 19 படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை வெறித்தனமாக காதலித்தார் என்று கூறப்படுகிறது.
Rajinikanth
ஸ்ரீதேவியின் தாயுடனும் ரஜினிக்கு நல்ல பழக்கம் இருந்தது. தன்னை விட 13 வயது இளையவர் என்பதால், அவர் ஸ்ரீதேவியை மிகவும் பாதுகாத்து வந்தார். நாளடைவில் ஸ்ரீதேவியை காதலிக்க தொடங்கி உள்ளார். ஸ்ரீதேவிக்கு 16 வயது இருக்கும் போது அவரின் தாயிடம் தனக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்குமாறு ரஜினி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஸ்ரீதேவியை ரஜினி, வெறித்தனமாக காதலித்து கொண்டிருந்த போது, ஸ்ரீ தேவியும் ரஜினியை காதலித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஒருமுறை கே.பாலசந்தர் ஒரு பேட்டியில், ரஜினி ஸ்ரீதேவியை மிகவும் காதலித்ததாக, அவர் வீட்டிற்குச் சென்று அவரிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்று தனது காதலை புரோபஸ் செய்ய ரஜினி சென்றதாகவும் கூறினார். .
இதுகுறித்து மேலும் பேசிய பாலச்சந்தர் “ ஸ்ரீதேவியின் வீட்டு கிரக பிரவேச விழாவுக்கு நானும் ரஜினியும் சென்றிருந்தோம். நாங்கள் அவர் வீட்டிற்கு சென்ற உடன் மின்சாரம் போய்விட்டது. வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. இதை கெட்ட சகுனமாக கருதிய ரஜினிகாந்த், தனது திருமணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.” என்று கூறியிருந்தார்.
தன் காதலை ஸ்ரீ தேவியிடம் சொல்லவில்லை என்றாலும் ரஜினி ஸ்ரீதேவியுடன் சிறந்த நட்பைப் பகிர்ந்து கொண்டார். ரஜினிகாந்த் நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது, கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற சிலரிடம் மட்டுமே அவரது தனிப்பட்ட தொலைபேசி எண் இருந்ததாம்.
ராணா படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, ஸ்ரீதேவி அவருக்காக விரதம் இருந்தார். அவர் ரஜினிக்காக ஷீரடி சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்தார். ஏழு நாட்கள் விரதம் இருந்து புனேவில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
பிப்ரவரி 24, 2018 அன்று ஸ்ரீதேவியின் அகால மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், உடனே அவரது குடும்பத்தினரை சந்திக்க மும்பை சென்றார். மேலும் ஸ்ரீதேவிக்காக பிப்ரவரி 26 அன்று தனது திருமண நாளை கூட ரஜினி கொண்டாடவில்லை
மனைவி லதா, மகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் ரஜினி தனது திருமண நாளை கொண்டாடுவது வழக்கம். ஆனால் ஸ்ரீதேவிக்காக அவரது முழு குடும்பமும் துக்கம் அனுசரித்ததால், 2018 இல் அவரது 37வது திருமண ஆண்டு விழாவைத் தவிர்த்துவிட்டார்.