உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்களும் தங்களது மகளிர் தின வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மகளிர் தினத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த கெளரவம்... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய நயன்தார...!

உலக நாயகன் கமல் ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் ஆபாச சாட்டிங்... இளம் பெண் மூலம் பொறி வைத்து பிடிக்கப்பட்ட போலி ஆசாமி...!

இந்த ட்வீட்டில் கமல் சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் நல்ல தமிழில் எளிமையாக கூறியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. சம வாய்ப்பும், பெண்களை சமமாக மதித்து நடத்தும் குணத்தையும் ஆண்கள் கற்றுக்கொண்டாலே போதும் பெண்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும் என்று மகளிர் தினத்தில் கமல் வைத்துள்ள குட்டு, அனைவரையும் கவர்ந்துள்ளது.