சமூக வலைதளங்களில் பிரபலங்களின், புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் பிரபலங்களின் பெயர்களில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பெயரில் போலியான முகநூல் பக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் கணக்குகள் துவங்கி, பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்து வரும் மர்ம நபர் மீது கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, பெயரில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆசாமி, போலி கணக்கு ஒன்றை துவங்கிய, அதன் மூலம் பல இளம் பெண்களுக்கும் ஆபாச சாட்டிங்கிகளை அனுப்பியுள்ளார்.  

அதை உண்மை என்று நம்பி, அவரிடம் பெண்கள் பலர் சாட் செய்து வந்துள்ளனர். மேலும் அந்த மர்ம ஆசாமி, பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவின் நண்பர் மூலம் அவரின் பார்வைக்கு வந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியான அவர், தன்னுடைய மேலாளர் உதவியுடன் ஹேமா என்ற பெயரில் அந்த மர்ம ஆசாமியிடம் சாட் செய்ய வைத்து அதனை ஆதாரமாகக் கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், அவர்களே பெண் ஒருவரை ஏற்பாடு செய்து, அந்த ஆபாச ஆசாமியுடன் முகநூலில் சாட்டிங் செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் மூலமாகவே அந்த போலி ஆசாமி, ஐதராபாத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு மறைந்த நின்ற போலீசார் மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பு ஆட்கள் அந்த போலி நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து அந்த போலி ஆசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.