பொன்னியின் செல்வனுக்காக குரல் கொடுத்த கமலஹாசன்..கனவு படத்திற்காக உழைக்கும் நாயகனை பாராட்டும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வனில் வந்திய தேவன் ரோலில் தோன்ற உலகநாயன் ஆர்வமுடன் முயற்சித்தார் என சொல்லப்படுகிறது.
செக்க சிவந்த வானம், புத்தம் புது காலை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார் மணிரத்னம். பான் இந்தியா படமான இந்த படத்தின் நடிகர்கள் குறித்த போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி ஷோபிதா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஜெயராமின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஒற்றராக ஜெயராம் நடித்துள்ளார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்
மேலும் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு தேதியும் வெளியாகி விட்டது. அதன்படி செப்டம்பர் 6, அன்று ட்ரைலர் வெளியாகவுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்கள் என்கிறசெய்தியையும் படக்குழு முன்னதாக அறிவித்துவிட்டது. முன்னதை இந்த இரு நாயகர்களுக்கும் மணிரத்னத்தின் ஹிட் படங்களில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது., நாயகன், தளபதி என இரு படங்களும் இன்றும் பேசும் படங்களாகவே உள்ளன.
மேலும் செய்திகளுக்கு...ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி
இந்த படத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் , விக்ரம், கார்த்தி, த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா இரட்டை வேடங்களில் நடிதுள்ளனர். ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், அருண்மொழி வர்மனாக ரவியும் நடிக்கின்றனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் நாவலின் தழுவல்தான் 'பொன்னியின் செல்வன்-பாகம் 1'. முன்னதாக இந்த நாவலை படமாக்க பலர் முயற்சித்து விட்டனர். எம்ஜிஆர் நடிப்பில், கமல் நடிப்பில் என இரு தலைமுறையினரும் முயன்று விட்டனர். இறுதியாக தற்போது மணிரத்னம் அதை நனவாக்கி விட்டார். அதோடு கமலின் நீண்ட நாள் ஆசையாக இந்த படம் இருந்துள்ளது. இதில் வந்திய தேவன் ரோலில் தோன்ற உலகநாயன் ஆர்வமுடன் முயற்சித்தார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கம் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார் கமல். மணிரத்னத்தின் வேண்டுகோளுக்கு இணக்க உலகநாயன் பொன்னியின் செல்வன் படத்திற்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.