அரசியல் வாழ்க்கையில் நுழைந்த பிறகு படங்களில் நடிப்பதை உலக நாயகன் கமல் ஹாசன் குறைத்துக் கொண்டுள்ளார். “விஸ்வரூபம் 2” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சபாஷ் நாயுடு” என்ற படத்தை தொடங்கினார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியன் 2” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த கிரேன் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதன் பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: “த்ரிஷா மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”... மிரட்டல் விடுத்த மீரா மிதுனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட த்ரில்லர் கதையான இதை கமல் ஹாசன் இயக்கி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளனர். வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.  

 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

இந்த படத்தில் நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், அவர் தான் கமல் ஹாசனுக்கு வில்லன் என்றும் கூறப்பட்டது. உலக நாயகன் கமல் ஹாசனுக்கு வில்லனாக களம் இறங்க போகும் விஜய் சேதுபதியின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருத்தனர். ஆனால் அதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், நான் ஏற்கனவே “இந்தியன் 2” படத்தில் நடித்திருக்க வேண்டியது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக என்னால் நடிக்க முடியாமல் போனது. கமல் சாருடன் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது. ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தால் கூட போதும். ஆனால் இப்போதைக்கு எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறியுள்ளார். இதன் மூலம் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.