பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக வனிதாவும் சும்மா இல்லாமல் தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் முத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து எல்லோரையும் கடுப்பேற்றி வருகிறார். 

கடந்த வாரம் முழுவதும் யூ-டியூப்பில் பீட்டர் பாலின் முதல் மனைவியான ஹெலனும், தற்போதைய மனைவியான வனிதாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறிவந்தனர். அந்த பஞ்சாயத்து எல்லாம் கொஞ்சம் தணிந்து, அவர்களே சட்டப்படி பிரச்சனையை சந்திக்கலாம் என சென்றுவிட்டனர். ஆனால் ஹெலனுக்கு சப்போர்ட் செய்வதாக கூறி வனிதாவிற்கு அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலரும் வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டனர். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இப்போது புதிதாக அந்த வரிசையில் சேர்ந்திருப்பது சூர்யா தேவி என்ற பெண், இவர் தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். வனிதா, பீட்டர் பால், வக்கீல் ஸ்ரீதர் என அனைவரை பற்றியும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.இவர் மீது வனிதா விஜயகுமார் சமீபத்தில் போலீசில் புகார் அளித்துள்ளார். 


என்ன தான் வனிதா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கத்தினாலும் யாரும் காதில் வாங்கவில்லை, இந்த ஆட்டத்தில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணனும், குட்டி பத்மினியும் அன்றே ஒதுக்கிக்கொண்டனர். ஆனால் சூர்யா தேவியும், ரவீந்தரும் விலகுவதாக தெரியவில்லை. இந்நிலையில் தன்னைப் பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவோருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இல்ல... இல்ல... எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

அதில், இப்போது நீங்கள் சாதாரணமாக என்னை பற்றி பதிவிடும் கமன்ட்டுகள் சட்டத்திற்கு புறம்பானவை. Cyber Bullying என்பது விளையாட்டல்ல, அதனால் ஒருவரின் உயிரே கூட போகலாம். ஏன், உங்களின் தரக்குறைவான கமன்ட்களால் நான் ஏதாவது செய்து கொண்டால், நீங்கள்தான் கொலைகாரர்கள் தெரியுமா.? அதனால் முதலில் சிந்தித்து செயல்படுங்கள்'' என கடும் எச்சரிக்கையை முன்வைத்துள்ளார். வனிதா அக்காவிற்கு சவால் விடுவதும், சத்தமாக பேசுவது சாதாரண விஷயம் தான் என்றாலும், இதை கொஞ்சம் நெட்டிசன்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள தான் வேண்டும்.