கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரீடிங் எடுக்க வீடுகளுக்கு வரவில்லை. இதனால் மின்வாரியம் முந்தைய மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்டினால் போதும் என்று அறிவித்திருந்தது.

 

இதையும் படிங்க:  பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் ரீடிங் எடுக்க வந்தபோது வழக்கமாக வரும் மின் கட்டணத்தை விட பல மடங்கு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். தமிழ் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதற்கு கூட தமிழ்நாடு மின்சாரவாரியம் விளக்கம் அளித்ததும் பிரசன்னா தனது கருத்தை வாபஸ்பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க: கணவருடன் மீண்டும் லிப்லாக்... படுக்கையறை போட்டோவை வெளியிட்ட வனிதாவை விளாசும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து நடிகைகள் விஜயலட்சுமி, கார்த்திகா நாயர், டாப்ஸி என பலரும் தங்களது வீடுகளுக்கு வந்துள்ள கரண்ட் பில்லை பார்த்து கொதிப்போனார்கள். கடந்த 3 மாதமாக படப்பிடிப்புகள் அனைத்தும் இல்லாததால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்த படியே வேலை செய்வதும் கரண்ட் பில் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களுக்கு வந்த கரண்ட் பில் ஸ்கிரீன் ஷார்ட்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தாறுமாறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: "என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...!

இந்நிலையில் பிரபல நடிகை ஹூமா குரேசியும் தனக்கு கரண்ட் பில் அநியாயத்திற்கு அதிகமாக வந்துள்ளதாக கொதித்தெழுந்துள்ளார். இது என்ன புது மின் கட்டணம்? கடந்த மாதம் 6 ஆயிரம் ரூபாய் கட்டினேன். இப்போது 50 ஆயிரம் வந்துள்ளது. எப்படி வந்தது இந்த கட்டண உயர்வு? என விளக்கம் கொடுங்கள் என அதானி மின் குழுமத்தை டேக் செய்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் மகாராஷ்ட்ரா முதலமைச்சரிடம் புகார் தெரிவியுங்கள் என ஐடியா கொடுத்துள்ளனர்.