தனது ஆறு மாத குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தாய்மையின் ஆறு மாதங்கள் என பதிவினை வெளியிட்டு உள்ளார் காஜல்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் தன் கைவசம் வைத்துள்ள இவர் பாலிவுட் மூலம் தான் நடிகையாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமானவர் தொடர்ந்து அங்கு பிசியாக வளம் வந்தார்.
பின்னர் பரத் நடித்த பழனி படம் மூலம் தான் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்துவிட்டது. இதையடுத்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, இஞ்சி இடுப்பழகி, விவேகம், மெர்சல், கோமாளி, ஹாய் சினமிகா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சில படங்களில் மட்டுமே தோன்ட்ரி இருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் டாப் டென் நாயகிகளில் ஒருவராகி விட்டார் காஜல் அகர்வால்.
மேலும் செய்திகளுக்கு..முத்தம் கேட்கும் வெண்பா... கடுப்பான பாரதி...அதிரடி முடிவெடுக்கும் கண்ணம்மா
படங்களில் பிஸியாக ஒப்பந்தமாகி வந்த காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு, சமீபத்தில் தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கர்ப்பகால புகைப்படங்கள் முதல் தனது குழந்தை பராமரிப்பு வரை பல பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார் காஜல் அகர்வால்.
தற்போது இவர் நடிப்பில் கருங்காப்பியம், பேதமை, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இந்தியன் 2 படத்திற்காக வெர்லெவலில் ஒர்க்கவுட் செய்யதுள்ள புகைப்படங்கள் பகிர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தனது ஆறு மாத குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தாய்மையின் ஆறு மாதங்கள் என பதிவினை வெளியிட்டு உள்ளார் காஜல்.
மேலும் செய்திகளுக்கு..கட் செய்த உள்ளாடை...மினுமினு பாவாடையில் சொக்கா வைக்கும் ஜான்வி கபூர்
