நடிகர் ஜெயராம்:

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக பல படங்களில், நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் பிரபல மலையாள நடிகை பார்வதியை கடந்த 1992 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிள்ளைகள்:

இந்த தம்பதிகளுக்கு, காளிதாஸ் என்கிற மகன் மற்றும் மாளவிகா என்கிற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவருமே தங்களுடைய படிப்பை முடித்து விட்ட நிலையில், அவரவருக்கான துறையை தேர்வு செய்து பயணிக்க துவங்கியுள்ளனர்.

மகன் காளிதாஸ்:

அந்த வகையில், நட்சத்திர ஜோடி, ஜெயராம் - பார்வதி தம்பதியின் மகன் காளிதாஸ், 2000 ஆம் ஆண்டு, மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: நடிகர் விஜய்யை பார்க்க குருவி போல் சேர்த்த தொகையை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயது சிறுவன்!
 

தமிழ் படங்கள்:

நடிகர் காளிதாஸ் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்து வெளியான, 'மீன் குழம்பும் மண் பானையும்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த காளிதாஸ், இயக்குனர் ராம் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் தற்போது நடித்துள்ளார். மேலும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

ஜெயராம் மகள் மாளவிகா:

இந்நிலையில், காளிதாஸை தொடர்ந்து, ஜெயராமின் மகள் மளவிகாவும் திரையுலகில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மாளவிகா அவர் தன்னுடைய தந்தையுடன் நடித்த விளம்பர படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார்.

வதந்தி:

இதனால் மாளவிகா நடிகையாக முயற்சி செய்து வருவதாக மலையாள திரையுலகில் ஒரு வதந்தி வேகமாக பரவியது.

மேலும் செய்திகள்: ஸ்டைலில் தளபதியை மிஞ்சிய லிட்டில் மாஸ்டர் சஞ்சய்! சும்மா வெறித்தனம் போங்க...
 

முற்றுப்புள்ளி:

இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, ஜெயராமின் மகள் மாளவிகா, சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை". வெளிநாட்டில் விளையாட்டு தொடர்பான முதுகலை படைப்பை முடித்துள்ளேன். அது தொடர்பாக வேலைக்கு
விண்ணப்பித்துள்ளேன், அதில் தான் முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.