தளபதி விஐய், தமிழ், மலையாளம், தெலுங்கு, என பல்வேறு மொழி ரசிகர்களையும், தன்னுடைய நடிப்பாலும்... ஸ்டைலிஷான நடனத்தாலும் கவர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இவரின் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போது... இவருடைய ரசிகர்கள் செய்யும் அளப்பறைக்கு அளவே இல்லை. மேலும் இவர் நடிக்கும் படம் குறித்து எந்த தகவல் புதிதாக வெளியானாலும், அதனை வெறித்தனத்தோடு, சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

அந்த வகையில், விஜய்யின் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகவும் எதிர்பார்ப்புக்கு  மத்தியில், ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த திரைப்படம், 'மாஸ்டர்' . இந்த படத்தை ஏற்கனவே 'மாநகரம்' , 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த, வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான 'லோகேஷ் கனகராஜ்' இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: ஸ்டைலில் தளபதியை மிஞ்சிய லிட்டில் மாஸ்டர் சஞ்சய்! சும்மா வெறித்தனம் போங்க...
 

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகியுள்ள இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன், முதல் முறையாக கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தளபதிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

இந்நிலையில் உலக மக்களை கடந்து, தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசாங்கம் துரிதமாக எடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்: நடிக்க ஆரம்பிக்கும் முன்பே நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..! போட்டோ கேலரி..
 

பலர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில்,தளபதியின் தீவிர ரசிகரான 12 வயதே ஆகும் சிறுவன் ஒருவன், விஜய்யை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என எண்ணி அவரை பார்க்க செல்வதற்காக, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பணத்தை குருவி போல் சேர்ந்து வைத்து வந்துள்ளார். 

மேலும் செய்திகள்:போஸ்டருக்கு பால் ஊற்றி திட்டு வாங்கிய தளபதி ரசிகர்கள் செய்த செயல்..! குவியும் பாராட்டு..!
 

இந்த பணத்தை தற்போது, அவர் கொரோனா தடுப்பு நிதிக்காக வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது. மேலும் கொரோனா பரபரப்பு முடிந்த பின், கண்டிப்பாக விஜய் அந்த சிறுவனை சந்திக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பதாகவும் உள்ளது. அந்த சிறுவனின் பெயர், மற்றும் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.