தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்யின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நட்சத்திரமாக இருக்கும், தளபதியின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே வேண்டாம். தளபதி எது செய்தாலும் அதனை வைரலாக்கி வருவது மட்டும் இன்றி, அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்தாலும் அதனை வைரலாக்கி விடுவார்கள். 

அந்த வகையில் சமீப காலமாக எப்போது தளபதியின் மகன்,  படிப்பை முடித்து, நடிக்க வருவார் என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களையும் தாண்டி, பல திரைபிரபலன்களுக்கும் உள்ளது. இதனை ஏ. ஆர்.முருகதாஸ் போன்ற பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

மேலும் அவ்வப்போது, விஜய்யின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே, தளபதியின் மகன் லிட்டில் மாஸ்டர்.... வேஷ்டி சட்டையில் இருந்த புகைப்படம் இணையத்தை கலக்கிய நிலையில், தற்போது... கையில் கேமராவுடன் ஜான்சன் சஞ்சய் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் செம்ம ஸ்டைலிஷான போட்டோ வெளியாகியாகி உள்ளது.

அந்த கியூட் புகைப்படம் இதோ...