ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இன்று காலை படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே பைரசி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

இதையும் படிங்க: கழுத்தில் தாலியுடன் சிம்பு பக்கத்தில் ஜம்முன்னு அமர்ந்திருக்கும் நிதி அகர்வால்... வைரலாகும் ஈஸ்வரன் ...!

பைரசி இணையதளங்களில் படங்களை வெளியிட வேண்டாம் என பல்வேறு சட்டங்களை போட்டு தடுத்தாலும் இணையத்தில் புது படங்கள் லீக்காவதை தடுக்க முடியவில்லை. நேற்று கொடுமையிலும் கொடுமையாக நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் சில மணி நேரங்களிலேயே எச்.டி. குவாலிட்டியுடன் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.