24 மணிநேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்திடாத சாதனை படைத்த ஜவான் டீசர்!
ஷாருக்கானின் ஜவான் பட டீசர், 24 மணி நேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை படைத்துள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவான் டீசர் முறியடித்துள்ளது. யூடியூப் தளத்தில் இதுவரை 112 மில்லியன் பார்வைகளை பெற்று அபிரிமிதமான சாதனைகளைப் படைத்துள்ளது, எனவே இதற்கு முந்தய வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது ஜவான் டீசர்.
முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட ஜவான் பட டீசர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இது ஷாருக்கானின் பரவலான புகழ், படத்தின் எதிர்பாப்புகளுக்கு சான்றாக உள்ளது. தொடர்ந்து ஜவான் பட டீசருக்கான பார்வைகள் பெருகிவரும் நிலையில், இப்படத்தின் வணிக ரீதியான விபரமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஜவான் டீசர் அனைத்து எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்திய டிஜிட்டல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இந்த வீடியோவுக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு திரையரங்குகளில் ஜவான் வெளியாவதற்கு முன்பே படம் குவித்துள்ள மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பிரதிபலிக்கிறது.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.