பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவர் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா
'பாக்கிய லட்சுமி' சீரியல் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.
அரைத்த மாவையே அரைக்கும் விதத்தில்... குடும்பங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, விதவிதமான பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' சீரியலும் ஒன்று. குறைந்த பட்ச கதாபாத்திரங்கள் நடிப்பில், செண்டிமெண்ட், காமெடி, கோபம், வெறுப்பு, போட்டி, சவால் என அனைத்து உணர்வுகளும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் என்றால், பாக்கிய லட்சுமி, கோபி, மற்றும் ராதிகா கதாபாத்திரங்கள் தான். இதைதொடர்ந்து இனியா, எழில், ராஜேஸ்வரி, செழியன் போன்ற கதாபாத்திரங்கள் உள்ளனர்.
மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாக்கிய லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா ஒரு நாளைக்கு சம்பளமாக 15,000 வாங்குகிறாராம். இவரை தொடர்ந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா ஆகியோர் ஒரு நாளைக்கு 12,000 சம்பளமாக வாங்குகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால், ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷ், அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா, செழியனாக நடித்து வரும் நடிகர் ஆகியோர் ஒரு நாளைக்கு 10,000 சம்பளமாக பெறுகிறார்கள்.
Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!
இனியாவாக நடித்து வருபவர் 8,000 சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் அதிக பாசமாக சம்பளம் வாங்குவது பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா என்பதும் தெரிகிறது.