Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி, எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தமிழில் துவங்கப்பட்ட போது, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. பல குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள் என சிலர் தங்களின் கண்டனங்களை எழுப்பினர்.
ஆனால் தொகுப்பாளராக களமிறங்கிய கமல்ஹாசன், முதல் சீசனிலேயே பலரது நெகடிவ் எண்ணங்களை மாற்றி, நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இதுவே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுடன்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது.
மகன்கள் துணையோடு சவாலில் ஜெயிக்கும் பாக்கியா! கோபி போட்ட புது பிளானில் ... மண்ணை போட்ட ராதிகா!
தற்போது இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்துள்ள நிலையில், விரைவில் 7 ஆவது சீசன் துவங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறாவிட்டாலும் பல பிரபலங்களுக்கு, பட வாய்ப்புகள் கிடைத்து இன்று, அவர்கள் முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வரும் பிரபலங்களாக உள்ளனர் என்பதால்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களுக்கு ஆடிசனும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய புரோமோ ஷூட்டிங்கை முடித்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு வாரத்தில் முதல் புரோமோ வெளியாகும் என தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள, தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 8 ஆம் தேதி துவங்க உள்ளதாம். இந்த முறையும் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் எப்போது பிக்பாஸ் ஆரம்பமாகும் என காத்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.