மகன்கள் துணையோடு சவாலில் ஜெயிக்கும் பாக்கியா! கோபி போட்ட புது பிளானில் ... மண்ணை போட்ட ராதிகா!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில், தற்போது மகன்களின் துணையோடு பாக்கியா கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிப்பது தான் காட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாகவே, பல சீரியல்கள் பெண்களை வலிமையானவர்களாக சித்தரித்த எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி எடுக்கப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், விஜய் டிவி சீரியலில் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து, குறைந்த கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கிய லட்சுமி தொடர்.
திருமணம் ஆனதில் இருந்து, கணவனே கண் கண்ட தெய்வம்... மாமனார், மாமியார், மற்றும் பிள்ளைகளுக்கு சேவை செய்வது மட்டுமே தன்னுடைய வாழ்க்கை என நினைக்கும் பாக்கிய லட்சுமியை... ஏமாற்றி விட்டு பழைய காதலியான ராதிகாவுடன், பாக்கிய லட்சுமியின் கணவர் கோபிக்கு நட்பு ஏற்படுகிறது. பின்னர் ராதிகா விவாகரத்து பெற உள்ளதை அறிந்து, அவரையே திருமணம் செய்து கொள்ள கோபி போட்ட மாஸ்டர் பிளான் எல்லாம் வேற ரகம்.
baakiyalakshmi
ஒருவழியாக பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பின்பும், பாக்கியா மீது பொஸசிவ் காரணமாக, இவர் வெளிப்படுத்தும் கோபங்கள் சிரிப்பு மூட்டி வந்தாலும்... பாக்கியா ஒவ்வொரு முறையும் கோபியிடம் சவால் விட்டு அதில் வெற்றி பெறுவதையும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் ராதிகா, கோபியின் அம்மா ஈஸ்வரியை ஒருமையில் பேச... வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. இதனை ஈஸ்வரி, மகன் கோபியிடம் சொல்லும் போது அவர் அம்மா பக்கம் உள்ள நியாயத்தை கூட கேட்காமல் ராதிகாவுக்கு சப்போர்ட் செய்கிறார். இவரின் செயல் அனைவர்க்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து ஒரு நிலையில், கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் பணத்தை கொடுத்தால் கோபி - ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார்கள்.
எப்படியும் ஒரு மாதத்திற்கும் 18 லட்சம் பணத்தை கொடுத்து கோபியையும்.. ராதிகாவையும் வெளியே அனுப்ப நினைக்கும் பாக்கியா, பிரமாண்ட சமையல் ஆர்டர் மூலம் 8 லட்சம் ரூபாயை தேத்தி விடுகிறார். மீதம் 10 லட்சம் ரூபாயை எப்படி சேர்ப்பது என திண்டாடி வருகிறார். செழியன் கையில் இருந்த பணத்தை வேறு தொழிலில் இன்வெர்ஸ் செய்து விட்டதால் எப்படியாவது பணம் ஏற்பாடு செய்ய நினைக்கிறார். அதே போல் எழிலும் தன்னால் முடிந்த பணத்தை பிரட்டும் முயற்சியில் இறங்குகிறார்.
மகன்கள் இருவருமே, அம்மாவுக்கு துணையாக நிற்க... தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து பாக்கியாவிடம் கொடுக்கிறார்கள். 18 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதனை கோபி முன்பு வைத்து வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார் பாக்கியா. ஆனால் கோபி அம்மாவை காக்கா பிடித்து அங்கேயே தங்கிவிட மாஸ்டர் பிளான் போட நினைக்கும் போது... ராதிகா குறுக்கிட்டு அவங்க சொன்ன படி பணத்தை கொடுத்துட்டாங்க வாங்க கோபி வீட்டை விட்டு போறதுதான் நமக்கு மரியாதை என கோபி ஆசையில் மண்ணை வாரி போட்டு விடுவது தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் வர போவதாக கூறப்படுகிறது.
கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!