MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!

கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!

உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்த, விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் முடிவு செய்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jul 10 2023, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

27

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் "Get Rich or Die Tryin" ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

Breaking: விஜய் திரையுலகில் இருந்து தற்காலிக விலகல்? மாவட்ட பொறுப்பாளர்களுடன் திடீர் சந்திப்பு!

37

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

47

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட "Get Rich or Die Tryin" பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club," "p.i.m.p," மற்றும் "candy shop" போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

ஜீவானந்தம் பெயரை கேட்டதுமே ஷாக்கான கெளதம்.! அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி!

57

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட், நான் இந்தியாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

67

டராக்டிகல் கான்சர்ட் யின் சிஇஓ ஆன வம்சிதரன் கௌதம ராஜன் இதற்கு முன்பாக சர்வதேச ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் ஆகிய ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்து வந்து கான்சர்ட் செய்தவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கிராமி மற்றும் எமி விருந்தினரான ஏகான் அவர்களை நம் தமிழில்  லவ்வந்தம் பாடலுக்காக இணைந்து பணியாற்ற வைத்த புகழ் இவரை வந்து சேரும். இது இல்லாமல் பல சர்வதேசிய கலைஞர்களுடன் ஷோஸ் செய்த பெருமையும் வம்சிதரன் கௌதமராஜனுக்கு கொண்டு சேரும்.

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படத்தில் இருந்து வெளியான ஆராத்யா பாடலின் புரோமோ!

77

விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved