Asianet News TamilAsianet News Tamil

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படத்தில் இருந்து வெளியான ஆராத்யா பாடலின் புரோமோ!

சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள 'குஷி' திரைப்படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஆராத்யா' பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
 

kushi movie Aradhya second single promo released
Author
First Published Jul 10, 2023, 5:19 PM IST

'சாகுந்தலம்' படத்தின் படு தோல்விக்கு பின்னர், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.  தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு உள்ளனர். 

kushi movie Aradhya second single promo released

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க... அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவார கொண்டா நடித்துள்ளார். குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் ரொமாண்டிக் பாடல் விஜய் தேவரைகோண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

Breaking: விஜய் திரையுலகில் இருந்து தற்காலிக விலகல்? மாவட்ட பொறுப்பாளர்களுடன் திடீர் சந்திப்பு!

kushi movie Aradhya second single promo released

முழுக்க முழுக்க... காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்த பாடல், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆராத்யா என்கிற இரண்டாவது சிங்கிள் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜீவானந்தம் பெயரை கேட்டதுமே ஷாக்கான கெளதம்.! அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி!


 

Follow Us:
Download App:
  • android
  • ios