தளபதி விஜய்யின் 'லியோ' படப்பிடிப்பு முடிவடைந்தது..! மாஸ் புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்..!
நடிகர் விஜய் நடித்து வந்த, 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து விட்டதாக, இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக, அதிகாரப்பூர்வமாக தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ்.
'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பின்னர், தளபதி விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்து வந்த லியோ திரைப்படம், ஜனவரி மாதம் 2-ஆம் தேதி, துவங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பல வருடங்களுக்கு பின்னர் நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யாப், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், யோகி பாபு, கதிர், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.
கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'விக்ரம்' திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே... இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது.
அதன் படம் ஷூட்டிங் நிறைவடைவதற்கு முன்பே இந்த படத்தின்... இப்படத்தின் டிஜிட்டல் உரிமம், சாட்டலைட் உரிமை ஆகியவை பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படதின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சுமார் 100 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்பட்டது.
Breaking: விஜய் திரையுலகில் இருந்து தற்காலிக விலகல்? மாவட்ட பொறுப்பாளர்களுடன் திடீர் சந்திப்பு!
அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை நிறைவு செய்து, ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட சென்னையில் நடத்தாமல், மதுரையில் திறந்தவெளி மைதானத்தில்... 50,000 ரசிகர்கள் முன்னிலையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பலே பிளான்களோடு படக்குழு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக மகிழ்ச்சியாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தளபதியின் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் எப்படி காப்பை கையில் வைத்து கொண்டு விஜயுடன் போஸ் கொடுத்தாரோ அதே போல் தற்போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை ஷேர் செய்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படு பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.