புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டிய நிஹாரிகா! இப்படி எல்லாம் செய்தாரா... விவாகரத்தின் காரணத்தை உடைத்த மாமனார்?
சமீபத்தில் நடிகையும், சிரஞ்சீவியின் தம்பி மகளுமான நிஹாரிக்கா கணவர் சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், இந்த விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தெலுங்கு மீடியாக்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே.. மெகா ஸ்டார் குடும்பத்தில் விவாகரத்து செய்திகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நிஹாரிகாவும், சைதன்யாவும் விவகாரத்தை அறிவித்ததை தொடர்ந்து, பவர் ஸ்டார் பவன் கல்யாணம் தன்னுடைய 3-ஆவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பவன் கல்யாண் தற்போது வரை இந்த தகவலை உறுதி செய்யவில்லை.
இது ஒரு புறம் இருக்க, நிஹாரிகாவின் விவாகரத்து விஷயம் மீண்டும் தெலுங்கு மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. நிஹாரிகா - சைதன்யா பிரிவு குறித்து, சைதன்யாவின் தந்தை ஓய்வு பெற்ற ஐஜி பிரபாகர் தன்னுடைய நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள விஷயம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணான நிஹாரிகாவும், சைதன்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இதனை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவருமே விரும்பி, புரிந்துணர்வுடன் விவாகரத்து செய்ததாக நிஹாரிகா அறிவித்தார். சைதன்யாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் கூறி இருந்தார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை என்பதை வெளிப்படுத்த வில்லை. நிஹாரிகா விவாகரத்து விஷயத்தை மிகவும் ஜோவியலாக எடுத்து கொண்டாலும், சைத்தாயா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மன அமைதிக்காக ஆன்மீகம், யோகா போன்ற வற்றில் கவனம் செலுத்த துவங்கினார்.
முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!
இவர்கள் இருவரின் விவகாரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை இருதரப்பு குடும்பத்தினரும் விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் சைதன்யாவின் தந்தை தன்னுடைய நட்பு வட்டாரத்தில் விவாகரத்துக்கான காரணம் குறித்து பொங்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதன்யாவின் தந்தை தனது நெருங்கிய நண்பர்களிடம் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நிஹாரிகா தன்னுடைய மாமனார் உட்பட, வீட்டில் உள்ள பெரியவர்கள் யாருக்குமே ஒரு நாள் கூட மரியாதை கொடுக்காதவர் என்றும், குறைந்த பட்சம் தன் கணவரிடம் கூட அன்பு காட்டாத பெண் என தெரிவித்துள்ளார்... அடிக்கடி கிளப்புகளுக்கும் பப்புகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், தன் குடும்பத்தைப் பற்றி ஒரு கணம் கூட நினைத்தது இல்லையாம்.
Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!
ஆனால் உண்மை என்ன என்பது தெரியாமல் மெகா ஸ்டாரின் ரசிகர்கள், தன்னுடைய மகனை மோசமாக விமர்சித்து வருவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று ஜொன்னலகட்டா பிரபாகர் ராவ் மனம் நொந்து கூறியுள்ளார். தெலுங்கு மீடியாக்களில் இப்படி வெளியாகும் விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் நெட்டிசன்கள் பலர், பிரபலமான நிகரிகாவுக்கு எதிராகவும்... யார் என்றே தெரியாத சைதன்யாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருவது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.