- Home
- Cinema
- முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!
முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!
தளபதி விஜய், இன்று சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளராகளை சந்தித்து பேசிய நிலையில், என்ன பேசினார் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பை நேற்று நிறைவு செய்த நிலையில், உடனடியாக இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அரசியல் வருகை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
வழக்கம் போல் மிகவும் எளிமையாக ஊதா நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்து வருகை தந்தார் விஜய். தளபதியை பார்க்க பல ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு, நின்றதாலும்... விஜய்யுடன் போட்டோ எடுக்க ஓடி வந்தாலும், சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது. தன்னுடைய ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு விஜய் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ளே சென்றார்.
ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு... திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை!
vijay
இந்த சந்திப்பின் போது முதல் முறையாக தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விஜய் பேசியுள்ளார். இதுகுறித்து இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளதாவது, தளபதி "அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்னும், அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம், என தெரிவித்துள்ள மாவட்ட பொறுப்பாளர்கள்... விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் அரசியலைப் பொருத்தவரை அஜித், ரஜினி, ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
திருமணமான நடிகைக்கு 12 மணிக்கு போன் போட்டு தொந்தரவு செய்த தனுஷ்! விவாகரத்தில் முடிந்த பிரச்சனை!
விஜய் அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிபேசியுள்ளதால், தளபதி 68 படத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.