திருமணமான நடிகைக்கு 12 மணிக்கு போன் போட்டு தொந்தரவு செய்த தனுஷ்! விவாகரத்தில் முடிந்த பிரச்சனை!
திருமணம் ஆன நடிகைக்கு, அவரின் கணவர் பக்கத்தில் இருக்கும் போதே... தனுஷ் நேரம் காலம் இல்லாமல் போன் செய்ததால், அந்த நடிகையின் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dhanush
திரையுலக பிரபலங்கள் பற்றி, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி, அடிக்கடி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் தற்போது, நடிகர் தனுஷ் - அமலாபால் குறித்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமலா பால் - தனுஷ் பற்றி பேசிய, செய்யாறு பாலு... அமலா பாலுடன் தனுஷ் நடித்த பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால்... இரண்டு மாதங்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும், இதுகுறித்து ஐஸ்வர்யா தந்தை ரஜினிகாந்திடம் முறையிட்ட போது, ரஜினிகாந்த் நேரடியாக அமலாபால் அப்பார்ட்மென்டுக்கு சென்று, அவர் குடும்பஸ்தன்... இனி உங்கள் இருவரை பற்றிய எந்த தகவலும் என் காதுக்கு வரக்கூடாது, என எச்சரித்து வந்ததாக கூறினார்.
Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!
இவரை தொடர்ந்து, மீண்டும் தனுஷை பற்றி அலசி ஆராய்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். தனுஷ் பற்றி அவர் பேசியுள்ளதாவது, "தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அவர்களிடம் நன்கு வேலையை வாங்கி கொள்வார் என்றும், இவர் தான் பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
பயில்வான் கூறியுள்ள அந்த நடிகை வேறு யாரும் இல்லை... அமலா பால் தான். திருமணத்திற்கு பிறகு, திரையுலகில் இருந்து விலகிய இவரை, மீண்டும் சமரசம் செய்து நடிக்க வைத்தது மட்டும் இன்றி, அமலா பால் இரவு நேரத்தில் கணவருடன் இருக்கும் போது, நேரம் காலம் இல்லாமல்... இரவு 12 மணிக்கு கூட போன் போட்டு அவரை தொந்தரவு செய்வாராம்.
கோல்டன் கோட்... லெகின்ஸ் மீது சேலை கட்டி தாறுமாறாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! ஹாட் போட்டோஸ்!
இந்த விவகாரம் சிறு தீ பொறியாக கணவன் - மனைவிக்குள் புகைய துவங்கி, பின்னர் மிகப்பெரிய பிரச்சனையாக கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து விவாகரத்து வரை சென்றதாக கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயில்வான் ரங்கநாதன் இப்படி அடுத்தடுத்து பிரபலங்களின் சர்ச்சை விஷயங்கள் குறித்து பேசி வருவது ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தாலும், இவரின் வீடியோவை ஃபாலோ பண்ணும் பல பிரபலங்களும் இருந்து கொண்டு தான் உள்ளனர்.