தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி முதல் முறையாக இந்தியில் நடித்து வெளியான திரைப்படம், 'தடக்'. இந்த திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் பல படங்களில் நடிக்க ஜான்வி கபூருக்கு அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

'தடக்' திரைப்படமும் அவர் எதிர்ப்பார்த்தது போல் வெற்றி படமாக அமைந்ததால், சில முன்னணி இயக்குனர்கள் கூட இவரை தங்களுடைய படத்திற்கு புக் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். 

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே, கவர்ச்சி உடைகள் அணிந்து, அடிக்கடி, பப், பார்ட்டி, என சர்ச்சையை ஏற்படுத்தி வந்த இவர் தற்போது  கவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்கள் ஹார்ட்  பீட்டை எகிற வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஊதா நிற உடையில் மிகவும் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் சிலர் ஒரு படத்தில் நடித்ததற்கே இப்படியா? என இவரையே கலாய்த்து வருகிறார்கள். 

அந்த புகைப்படம் இதோ:

 

View this post on Instagram

😈

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on Sep 25, 2018 at 2:49am PDT