இப்போதான் பணக்காரனா பீல் பண்றேன்.. அரங்கை சிரிப்பலையில் மூழ்கடித்த சூப்பர் ஸ்டார் - ஜெயிலர் சக்சஸ் மீட் Video!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலை கண்டுள்ளது. தற்பொழுது இந்த திரைப்படம் OTT தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தனது அடுத்த பட பணிகளை துவங்க உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏற்கனவே ஜெயிலர் திரைப்பட சம்பந்தமான பல விழாக்களில் பங்கேற்று பேசினார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டிங் தற்பொழுது நடந்து முடிந்துள்ளது.
இதில் ஜெயிலர் படத்தில் பணியாற்றிய அனைத்து முன்னணி கலைஞர்களும் பங்கேற்று தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும், இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும், குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஜெயிலர் திரைப்பட சக்சஸ் நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கலாநிதி மாறனை புகழ்ந்து பேசினார். மேலும் தனக்கும், இயக்குனருக்கும், அனிருத்திற்கும் சொகுசு கார்களை வழங்கி அசத்தியதோடு படத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் தங்க காசுகளை அவர் பரிசாக வழங்கியதையும் மேற்கோளிட்டு காட்டினார்.
தொடர்ந்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கலாநிதி மாறன் எனக்கு பரிசளித்த அந்த காரில் தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அந்த காரில் ஏறிய பிறகு தான், நான் ஒரு பணக்காரனைப் போல ஃபீல் செய்கிறேன் என்று கூறி தனக்கே உரித்தான ஸ்டைலில் சிரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கண்டு அந்த அரங்கில் கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தனர். தற்பொழுது அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
யூடியூபர் வாசனுக்கு சிறை தண்டனை விதிப்பு... டிடிஎப் மீது அடுத்தகட்ட ஆக்ஷனுக்கு தயாரான போலீஸ்..!