Asianet News TamilAsianet News Tamil

தரம் பிரித்து பார்க்குற நேரம் வந்தாச்சு... போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்..!

இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டில் (Biggboss house) சிறப்பான பங்களிப்பை கொடுப்பது யார்? கொடுக்காதது யார்? என்று பிக்பாஸ் தீர்மானிக்கும் கலக்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ (Biggboss Promo) மூலம் தெரியவந்துள்ளது.

 

Its time to dump and move on Bigg Boss give tha shock for contestents
Author
Chennai, First Published Oct 15, 2021, 11:23 AM IST

இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பது யார்? கொடுக்காதது யார்? என்று பிக்பாஸ் தீர்மானிக்கும் கலக்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

Its time to dump and move on Bigg Boss give tha shock for contestents

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டு வாரத்தை நெருங்கி வரும் நிலையில், இம்முறை மொத்தம் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் இவர்களில் யார் இந்த வாரம்  வெளியேறுவார் என சரியாக கணிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் பிக்பாஸ் ஒரு குழுவை நியமித்து சிறப்பான பங்களிப்பை அளித்தது யார் என்றும் பங்களிப்பாய் கொடுக்காதவர் யார் என்றும் தரம் பிரித்து பார்க்கும் நேரம் வந்து விட்டதாக அபிஷேக் படிக்கிறார்.

மேலும் செய்திகள்: கூடிக்கொண்டே செல்லும் அழகு... ஸ்லிம் ஃபிட்டாக மாறி முன்னனி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகை சினேகா!!

 

Its time to dump and move on Bigg Boss give tha shock for contestents

மேலும் செய்திகள்: ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! மோசமான கவர்ச்சியால் மூட் அவுட் செய்யும் போட்டோஸ்.!!

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்குள் இருந்த நெருக்கம் தற்போது குறைந்துள்ளதால், ஒருவர் பற்றி ஒருவர் குறை சொல்லி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், இமான் அண்ணாச்சி காமெடி செய்கிறார் ஆனால் அவரது காமெடி எனக்கு சுத்தமாக செட் ஆகவில்லை என... அபிஷேக் கூறுவதும், இன்றிய தினம் விஜயதசமியை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் ஒரு திருவிழா கலை கட்ட உள்ளதும் ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios