'ஜோஷ்வா இமை போல் காக்க' முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவரும்! தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்!

ஜோஷ்வா இமைப்போல் காக்க படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை... ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
 

Ishari K Ganesh about Joshua  imai pol Kaakha movie mma

உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Ishari K Ganesh about Joshua  imai pol Kaakha movie mma

கர்ப்பத்தை அறிவித்த பின்.. கணவர் ரன்வீருடன் ஏர்போர்ட் வந்த தீபிகா படுகோன்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் இந்தப் படம் பற்றி கூறும்போது, ​​“இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நாங்கள் தயாரித்த முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது எங்களின் இரண்டாவது படத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். 

Ishari K Ganesh about Joshua  imai pol Kaakha movie mma

Bhanupriya School Drop Out: பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம்.! பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்திய பானுப்பிரியா.!

'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஸ்டைலான ஆக்‌ஷன்-பேக்ட் படமாக தமிழ் பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் நிச்சயம் விருந்தாக அமையும். படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவரும் படமாக இது இருக்கும். யானிக் பென் மற்றும் அவரது குழுவினர் பார்வையாளர்களைக் கவரக்கூடிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுத்துள்ளனர். வருணுக்கு இது கனவு நனவாகும் தருணம். தன்னுடைய சிறப்பான முயற்சியை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட கிருஷ்ணாவுக்கு நன்றி. இது கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படம் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஒரு பெரிய விருந்தாக இருக்கும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் நாளை தமிழகத்தில் 200+ திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios