Asianet News TamilAsianet News Tamil

பண கஷ்டத்தில் தவிக்கும் தமன்னா! வீட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு சென்ற நிலைமை.. பின்னணி என்ன? அதிர்ச்சி தகவல்

நடிகை தமன்னா, மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவரின் இந்த நிலைமைக்கான பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Is this Reason for tamannaah suffering from financial difficulties mma
Author
First Published Jul 5, 2024, 10:43 AM IST

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த மில்க் பியூட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா, மும்பையில் உள்ள தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இந்தியன் வங்கியில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல வகையில் பணம் சம்பாதிக்கும் இவரின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்கிற சில காரணங்கள் யூகங்கள் அடிப்படையில் வெளியாக துவங்கியுள்ளன.

மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நடிகை தமன்னாவுக்கு தரமான பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து, தூக்கி விட்டது தமிழ் சினிமா தான். எனவே என்னதான் ஹிந்தியில் தற்போது பிஸியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சில படங்களில் வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Is this Reason for tamannaah suffering from financial difficulties mma

Poova Thalaya: அடிமட்டத்திற்கு போன TRP..! ஆரம்பித்த வேகத்தை முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி..!

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்த 'அரண்மனை 4' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தமன்னா அம்மாவாக நடித்திருந்த நிலையில்... இதுவரை வெளிப்படுத்திடாத உணர்வுபூர்வமான நடிப்பை இப்படத்தில் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பிலும் இணைந்தது. அதை போல் இந்த படத்தின் புரமோஷன் பாடலாக அமைந்த அச்சச்சோ பாடல்...  குட்டிஸ் சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் முணுமுணுக்கக் கூடிய பாடலாக இருந்து வருகிறது.

நடிகை தமன்னா தன்னுடைய அழகைத் தாண்டி, நடிப்பு திறமையால் கடந்த 15 வருடங்களுக்கு மேல் தென்னிந்திய திரையுலகில் நிலையான நடிகை என்கிற இடத்தை பிடித்துள்ளார். மேலும் லாஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற வெப் தொடரில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க துவங்கிய தமன்னா... வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட பின்னரும் தன்னுடைய காதலருடன் தொடர்ந்து டேட்டிங் செய்து வருகிறார்.

Is this Reason for tamannaah suffering from financial difficulties mma

இந்த வருடத்திலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தமன்னா விஜய் வர்மாவை திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமன்னா திடீரென ஏற்பட்ட பண கஷ்டத்தால் தனக்கு சொந்தமாக மும்பையில் மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ₹7.84 கோடி பணம் பெற்றுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமராஜன் பட ஹீரோயின் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்!

மேலும் மும்பை ஜூகு பகுதியில் சுமார் 6065 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் ஒன்றை ரூபாய் 18 லட்சம் வாடகைக்கு எடுத்துள்ளாராம். 27 லட்சம் அந்த அலுவலகத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,  ஐந்து வருடத்திற்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில்... தமன்னாவின் இந்த திடீர் பண கஷ்டத்தின் பின்னணி குறித்தும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

Is this Reason for tamannaah suffering from financial difficulties mma

அதாவது தமன்னா நடிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். இது மட்டும் இன்றி தமன்னாவுக்கு சொந்தமாக நகைக்கடையும் உள்ளது. இதை தொடர்ந்து சில பிஸினஸ்களில் இன்வெர்ஸ் செய்துள்ளதால்... தன்னுடைய கை இருப்பில் இருந்த பணமும் கரைந்து விட்டதாம். தற்சமயத்திற்கு திடீர் என ஏற்பட்ட பண தேவைக்காகவே இவர் வீட்டை 7 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios