- Home
- Gallery
- Poova Thalaya: அடிமட்டத்திற்கு போன TRP..! ஆரம்பித்த வேகத்தை முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி..!
Poova Thalaya: அடிமட்டத்திற்கு போன TRP..! ஆரம்பித்த வேகத்தை முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி..!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த, பூவா தலையா சீரியல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்கு முன்னரே... முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என, இல்லத்தரசிகள் மத்தியில் தனி வரவேற்பு இருந்தாலும்... ஒரு சில சீரியல்களுக்கு ஏனோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைப்பதில்லை.
அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பான தொடர் தான் 'பூவா தலைவா'. மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின், TRP ரேட்டிங் அடிமட்டத்தை நோக்கி செல்வதால், சீரியலை இன்னும் சில தினங்களில் ஒரேயடியாக முடிக்க சன் டிவி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீரியல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் துவங்கப்பட்டது. எஸ் பி ராஜ்குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சித்தாரா நடித்து வருகிறார். மேலும் தர்ஷனா ஸ்ரீபால், கோலிஷா,கிஷோர் தேவ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
வழக்கமான குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், மாமியாரை மருமகள்... சிலரின் தவறான தூண்டுததால் எப்படி எல்லாம் அசிங்கப்படுத்துகிறார் என்பதை கதைக்களம். ஏழை குடும்பத்து பெண், தன்னுடைய மகனுக்கு சரியான துணையாக இருப்பர் என நினைக்கும் மாமியார் பற்றிய சரியான புரிதல் இல்லாத பெண்ணாக இருக்கும் மருமகளை மாமியார் எப்படி மாற்ற நினைக்கிறார் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறி வந்தார் இயக்குனர்.
Poova thalaiya
200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல், இந்த தொடரை விரும்பி பார்க்கும் பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.