- Home
- Gallery
- செண்பகமே.. செண்பகமே பாடல் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்
செண்பகமே.. செண்பகமே பாடல் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்
ஹீரோயினாக நடித்த போது கூட காட்டாத கவர்ச்சியை தன்னுடைய 54 வயதில், அள்ளிதெறித்து வருகிறார் ராமராஜன் பட நாயகி நிஷாந்தி. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், ராஜமுத்திரியில் பிறந்தவர் தான் நடிகை சாந்தி பிரியா. பிரபல நடிகை பானுபிரியாவின் தங்கையான இவர், தமிழில் நிஷாந்தி எங்கிற பெயரில் தான் அறிமுகமானார்.
இவர் தெலுங்கில் 1987 ஆம் ஆண்டு, Kaboye Alludu என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு, நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் நாயகியாக நடித்தார்.
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்... இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல், மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் நிஷாந்தியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
90-களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட, நிஷாந்தி மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் அதிக கவனம் செலுத்தியதால் 10-திற்கும் குறைவான தமிழ் படங்களிலேயே நடித்தார்.
அக்கா பானுபிரியாவை பீட் பண்ணும் அளவுக்கு தன்னுடைய கேரியரில்... உச்சசத்தை எட்டும் வாய்ப்பு இருந்தும், 1992-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின்னர் கமிட் ஆகி இருந்த ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து விட்டு 1994-ஆம் ஆண்டு முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு தான் நிஷாந்தியின் கணவர் திடீர் என மரணம் அடைந்தார்.
கணவரின் மரணத்திற்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்த இவர், பின்னர்... சில ஹிந்தி சீரியல்களில் நடிக்க துவங்கினார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தன்னுடைய 54 வயதிலும் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் விதத்தில் போட்டோ ஷூட் நடத்தி... அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
திரைப்படங்களில் நடிக்கும் போது கூட... நீங்கள் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவில்லையே என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மும்பையில் இருந்தாலும், தன்னுடைய அக்கா மற்றும் குடும்பத்தினரை பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்து செல்லும் நிஷாந்தி, கடந்த ஆண்டு பானுபிரியா நிலை குறித்து கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பானுபிரியா நியாபக மறதியால் கஷ்டப்பட்டு வருவதாகவும், படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் டயலாக் பேச மறந்து விடுவதால் எந்த படத்திலும் அவரால் நடிக்க முடியவில்லை என்றும், சிலர் இதை சாதகமாக கொண்டு, பண விஷயத்திலும் அவரை ஏமாற்றி விட்டதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.