விமானத்தில் ரசிகர்களை அவமதித்த கரீனா கபூர்... அருகில் இருந்து பார்த்து நோஸ் கட் பண்ணிய இன்போசிஸ் நிறுவனர்
பாலிவுட் நடிகை கரீனா கபூர் பற்றி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண மூர்த்தி பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, நாராயண மூர்த்தி, நடிகை கரீனா கபூர் அவரது ரசிகர்களை உதாசினப்படுத்தியது குறித்து பேசினார். அதன்படி, ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் வரும்போது என் அருகில் நடிகை கரீனா கபூர் அமர்ந்திருந்தார். அவரைப்பார்த்ததும் நிறைய பேர் வந்து அவரிடம் ஹலோ சொன்னார்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதைபார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்னைப் பார்க்க யார் வந்தாலும், நான் எழுந்து நின்று அவர்களிடம் ஒரு நிமிடமாவது உரையாடுவேன். அதுதான் அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என நாராயண மூர்த்தி சொல்லும் போது குறுக்கிட்ட அவரது மனைவி சுதா, அவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் அனைவருக்கும் ஹெலோ சொல்லி சோர்வடைந்திருப்பார் என சொல்ல, அங்கிருந்தவர் சிரித்தனர்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் தந்த மவுசு... ஜெயிலர், கங்குவா என சினிமாவிலும் கலக்கும் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கி உள்ளாரா?
நீங்க ஒரு ஐடி கம்பெனி வைத்திருப்பவர் உங்களை ஒரு 10 ஆயிரம் பேருக்கு தெரிந்திருக்கும், ஆனால் சினிமா நடிகர்களுக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சுதா சொன்னதும், அதை ஏற்க மறுத்த நாராயண மூர்த்தி, அது பிரச்சனை இல்லை. யாராவது நம்மிடம் அன்பு காட்டுகிறார்கள் என்றால், நாமும் அதை நம்மால் முடிந்த வரை திருப்பி காட்ட வேண்டும். அது ரொம்ப முக்கியம். அது உங்களது ஈகோவை குறைக்க உதவும்” என கூறினார்.
நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடிகை கரீனா கபூரின் குணத்தையும் சாடி வருகின்றனர். சிலரோ அவர் இப்படி திமிராக இருந்ததால் தான் தற்போது சினிமாவே அவரை புறக்கணித்துவிட்டது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... புர்கா அணிந்தபடி.. கோவிலுக்கு பயணம்! பரபரப்பை கிளப்பிய நடிகை சுவாதியின் வீடியோ