Asianet News TamilAsianet News Tamil

புர்கா அணிந்தபடி.. கோவிலுக்கு பயணம்! பரபரப்பை கிளப்பிய நடிகை சுவாதியின் வீடியோ

சுப்ரமணியபுரம் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை சுவாதி, கோவிலுக்கு செல்லும் போது புர்கா அணிந்து பயணம் செய்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

subramaniapuram actress Swathi reddy wearing burka while travel for temple
Author
First Published Jul 25, 2023, 1:47 PM IST

தெலுங்கில் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த டேஞ்சர் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுவாதி ரெட்டி. இதையடுத்து தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் சுவாதி. சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தில் நடிகர் ஜெய்யின் காதலியாக நடித்திருந்தார் சுவாதி.

குறிப்பாக இதில் இடம்பெறும் கண்கள் இரண்டால் என்கிற பாடலில் நடிகர் ஜெய்யுடன் செம்ம கியூட்டாக ரொமான்ஸ் செய்திருப்பார் சுவாதி. அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இதையடுத்து போராளி, விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கனிமோழி போன்ற படங்களில் நடித்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்கிற பைலட்டை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... உலகிலேயே 5-வது பெரிய வைரத்தை தமன்னாவுக்கு கிஃப்டாக கொடுத்த சூப்பர்ஸ்டார் குடும்பம் - காரணம் என்ன?

subramaniapuram actress Swathi reddy wearing burka while travel for temple

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சுவாதி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான பஞ்சதந்திரம் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கோவிலுக்கு செல்வதற்காக இரயிலில் பயணம் செய்த நடிகை சுவாதி, ரயில் நிலையத்தில் புர்கா அணிந்தபடி வலம் வந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swathi (@swati194)

இதுகுறித்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் கோவிலுக்கு செல்லும் போது இப்படி புர்கா அணியலாமா அதற்கு பதிலாக மாஸ்க் அணிந்து செல்லலாமே என விமர்சித்து வந்தனர். இதற்கு சுவாதி, வெளியில் செல்லும்போது எப்போதுமே நான் புர்கா அணிந்துதான் செல்வேன், அப்போது தான் மக்களோடு மக்களாக என்னால் பயணிக்க முடிகிறது. நினைக்கும் இடத்தில் லெமன் சோடா குடிக்க முடிகிறது என கூலாக பதிலளித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் தந்த மவுசு... ஜெயிலர், கங்குவா என சினிமாவிலும் கலக்கும் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கி உள்ளாரா?

Follow Us:
Download App:
  • android
  • ios