கடந்த மாதம் 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர். இதுதொடர்பாக நசரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணை  மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

இதையடுத்து மார்ச் 3ம் தேதி நடிகர் கமல் ஹாசன் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. அன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் ஆஜரான கமலிடம் இரண்டறை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நம்மவரிடமே விசாரணையே என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும், கமல் ஹாசனின் ரசிகர்களும் கொந்தளித்தனர். கமலிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை கூட வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டார். இந்தியன் 2 விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி காவல்துறை தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் தன்னை துன்புறுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கும் படியும், தனது வழக்கை அவசர வழக்காக ஏற்கவும் கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்?

கமல் ஹாசனின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.