ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்??
இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல் ஹாசன் இணைப்பு குறித்து தொடர்ந்து வதந்திகளாக வலம் வரும் நிலையில், மற்றொரு தகவல் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் ரஜினியுடன் 90ஸ்-களில் ஜோடி போட்ட குஷ்பூ, மீனா மட்டுமல்லாது கரண்ட் டிரெண்டில் உள்ள கீர்த்தி சுரேஷ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!
இதற்கு அடுத்து கடைசியாக சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் படம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!
இதனிடையே உலக நாயகன் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த படத்தை தற்போது விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அந்த கதையை கேட்ட ரஜினிகாந்த் ஓ.கே.சொன்னதாகவும் தகவல்கள் அடுத்தடுத்து பரவின.
இது அனைத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் இணைய உள்ள புதிய படத்திற்கான பூஜை மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை மறுத்த ராஜ்கமல் நிறுவனம் புதிய படம் குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசனிடம் 100 கோடி சம்பளம் கேட்டதாகவும், தற்போது கமல் உள்ள சூழ்நிலையில் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்பதால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, நட்பில் விரிசல் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக... நீருக்குள் நின்றபடி... பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை...!
இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல் ஹாசன் இணைப்பு குறித்து தொடர்ந்து வதந்திகளாக வலம் வரும் நிலையில், மற்றொரு தகவல் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அது என்னவென்றால், கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் ரஜினிக்கு பதிலாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.“அண்ணாத்த” படத்திற்கு பிறகு அரசியலில் தீவிரமாக இறங்க ரஜினி திட்டமிட்டுள்ளதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.