ஆண்கள் பணம் கொடுத்தால் பெண்களும் என்ஜாய் பண்றாங்க... என்னை அட்ஜஸ்மென்ட்க்கு கூப்பிடல: ரேகா நாயர்
ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை என்ஜாய் செய்கின்றனர். ஆனால் இதுவரை என்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடவில்லை என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை என்ஜாய் செய்கின்றனர். ஆனால் இதுவரை என்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடவில்லை என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அதிகம் பேசப்படும் பெண்களில் ஒருவராக இருந்து வருவபர் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாகியுள்ள இரவின் நிழல் என்ற படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அவர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்தகாட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் அவருக்கு பாராட்டும் மறுபுறம் கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ரேகா நாயர், கலையை கலையாகத்தான் பார்க்க வேண்டும், நான் நடித்துள்ள அந்த காட்சி மிகவும் உருக்கமான காட்சி ஒரு தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் குடிக்கும் காட்சி, நிர்வாணமாக நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டு கிடைக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களும் வந்துள்ளன. பலர் பணம் கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வீர்களா என கேட்கிறார்கள், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, கலையை ரசிக்க தெரியாதவர்களுக்கு சோல்லி புரியவைக்க முடியாது என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: சூர்யாவின் ஜெய் பீம் படம் பார்த்து கதறி அழுத சீன மக்கள் - வைரலாகும் வீடியோ
இதுஒரு புறம் உள்ள நிலைகள் சமீப காலமாக திரைப்படங்களில் நடிகைகள் என்னை தயாரிப்பாளர் இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள் என புகார் கூறி வருகின்றனர். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படியுங்கள்: 10 வருட தொகுப்பாளி பயணம்..பிரியங்காவை கொண்டாடிய விஜய் டிவி..இந்த விழாவில் அவரது கணவர் எங்கே?
இதழில் இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை ஷகிலாவின் கேள்விகளுக்கு ரேகா நாயர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் இதுவரை தன்னை யாரும் அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு:-
மீடூ என்பதெல்லாம் பொய், ஒருவர் கூப்பிட்டால் விருப்பப்பட்டால் போகலாம் இல்லையென்றால் வர முடியாது என மறுத்து விடலாம், நாம் ஒன்றும் விரல் சூப்பும் குழந்தைகள் அல்ல, ஒருவர் எதற்காக பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும், எனவே ஒரு படத்தை நடித்து 10 வருடம் கழித்து விட்டு அந்த இயக்குனர் என்மீது கை வைத்தார், இந்த இயக்குனர் கை வைத்தார் என்று கூறுவதையெல்லாம் ஒப்புக்கொள்ளவே முடியாது, அப்படி என்றால் பத்து வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள், என்ஜாய் செய்து கொண்டிருந்தீர்களா.
ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கூறுகிறீர்களே பெண்களும் என்ஜாய் செய்கிறார்கள் இதுவரைக்கும் எந்த டைரக்டரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வா என கூப்பிடவில்லை, எனக்கு தெரிந்து ஒரு இயக்குனரோ அல்லது ஒரு நடிகையோ காதல் வயப்பட்டு அதில் உடலுறவு கொள்கின்றனர்.
அதைத் தாண்டி இன்று படுக்க வந்தால்தான் படப்பிடிப்பு என யாரும் சொல்ல முடியாது, அப்படி யாராவது சொன்னால் அவர்களை நம் பெண்கள் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள், எனவே இதுபோன்ற புகார்கள் சற்று மிகைப்படுத்தி கூறப்படுகிறதோ என சந்தேகிக்க தோன்றுகிறது. இவ்வாறு ரேகா நாயர் கூறியுள்ளார்.