Jai Bhim : ஜெய் பீம் படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுததோடு, அப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் வியந்து பாராட்டி உள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் ஜெய் பீம். தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் பழங்குடியின மக்களுக்காக போராடிய வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்த இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 

இப்படத்திற்கு சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இப்படத்துக்கு விருதுகளும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் ஜெய் பீம் படமும் திரையிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ.. இந்த வருஷம் மட்டும் 50 படங்களா! கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் அந்த நடிகர் யார் தெரியுமா?

Scroll to load tweet…

அப்போது படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அதுமட்டுமின்றி அப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் வியந்து பாராட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இதுபோன்ற நிறைய படங்களை எதிர்பார்ப்பதாக சீன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படமும் சீனாவில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. அப்படம் அங்கு ரிலீசான சமயத்திலும் இதே போன்று வீடியோ வெளியாகி இருந்தது. தற்போது ஜெய் பீம் படத்துக்கு அதே அளவு வரவேற்பு சீன மக்களிடம் கிடைத்துள்ளதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா...! சீக்ரெட் தகவலை வெளியிட்ட செல்வராகவன்