10 வருட தொகுப்பாளி பயணம்..பிரியங்காவை கொண்டாடிய விஜய் டிவி..இந்த விழாவில் அவரது கணவர் எங்கே?

பிரியங்காவின் மிக முக்கிய நிகழ்ச்சியான இதில் இடம்பெற்ற காட்சி தொகுப்பில் அவரது கணவர் பிரவீன் குமார் இடம்பெறாமல் இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

priyanka deshpande husband missing in her 10 years of anchoring special show

பிரபல தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளர் பிரியங்கா தான். இவரது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை வசிகரித்து வந்துள்ளார். சூப்பர் சிங்கர்ஸ் ஸ்டார் மியூசிக் ஒல்லி பெல்லி, பிக் பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக பங்கேற்று சிறப்பாக விளையாடியிருந்தார். 

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் பிரியங்காவின் கோபத்தை பிக் பாஸில் தான் பார்க்க முடிந்தது. அவ்வப்போது தாமரை செல்வி உடன் சண்டை, நிரூப்புடன் மோதல் என பல்வேறு சர்ச்சைகளை சிக்கியிருந்த போதிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். ஆனால் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை இழந்த இவர்   மீண்டும் தனது பழைய பணிக்கே திரும்பி விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...அச்சசோ...சிம்மிஸ் மட்டும் அணிந்து எக்குத்தப்பான போஸ் கொடுக்கும் சிம்பு நாயகி நிதி அகர்வால்

priyanka deshpande husband missing in her 10 years of anchoring special show

முன்னதாக பிக் பாஸில் இவருக்கு நண்பர்களாக அமைந்தவர்களுடன் பல இடங்களில் சுற்றித்திரிந்து தனது விடுமுறை நாட்களை கழித்த பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளனி என விருது வழங்கப்பட்டது குறித்து கேள்விகளும் எழுந்தன.  இருந்தும் எதையும் கண்டுகொள்ளாத இவர் தற்போது விஜய் டிவியில் பழையபடி மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் கனடா சென்ற பிரியங்கா நடுரோட்டில் நின்றபடி வேற லெவலுடன் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதோடு நீங்கள் அழகாக பேசுவது மட்டுமல்லாமல் நன்றாக நடனமாடுகிறீர்கள் என்றும் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...இந்த வருடம் தாயான திரை பிரபலங்கள்...யார் யார் தெரியுமா?

priyanka deshpande husband missing in her 10 years of anchoring special show

இந்நிலையில் இவர் விஜேவாக பணியாற்ற துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது. அதில் இவரின் சிறந்த தருணங்கள்இடம்பெற்று இருந்தது. ஆனால் இவரது கணவரின் காட்சிகள் மட்டும் இல்லை. பிரியங்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீசியனாக பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் குறித்து அடிக்கடி பேசி வந்த பிரியங்கா சமீப காலமாக அவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகளுக்கு...கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

 

இவ்வாறு இருக்க பிரியங்காவின் மிக முக்கிய நிகழ்ச்சியான இதில் இடம்பெற்ற காட்சி தொகுப்பில் அவரது கணவர் பிரவீன் குமார் இடம்பெறாமல் இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரிவு ஏற்பட்டுள்ளதாக ஒரு கருத்து அடிபட்டு வரும் நிலையில் இது மேலும் சந்தேகங்களை வலுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios