சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீசார் கடுமையாக தாக்கியதை அடுத்து தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதலில் எஸ்ஐ ராகுகணேஷ் இதில் கைது செய்யப்பட்டார்.அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடைசியாக காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ள ஐந்து பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

தற்போது இந்த வழக்கை  சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் விவகாரம் ஆரம்பித்த காலத்தில் பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பின்னரே இந்த பிரச்சனை திரைத்துறையினர் பக்கம் திரும்பியது. 

 

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சிபிசிஐடி போலீசார், பாடகி சுசித்ரா கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். அவருடைய வீடியோவை பகிர வேண்டாம் என்றும். அதை உடனடியாக நீக்க வேண்டும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாடகி சுசித்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த வீடியோவை டெலிட் செய்தார். இதுகுறித்து சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி

அதில் சிபிசிஐடி தன்னை அழைத்து பேசியதாகவும், போலி செய்திகளை பரப்பியதாக உங்களை கைது செய்வோம் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் படியே வீடியோவை நீக்கியதாகவும், இருப்பினும் மக்கள் இந்த வழக்கை கவனத்துடன் பார்க்க வேண்டும், இந்த வழக்கில் பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.