அருந்ததி படத்தில் அனுஷ்காவை வாட்டி வதைத்த சோனு சூட்டை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். திரையில் என்ன தான் வில்லனாக வலம் வந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டிவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார். 

 

இதையும் படிங்க: அம்சமான ஸ்லீவ் லெஸ் உடை... லேசாக தெரியும் இடை... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்தது ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சோனு சூட் மீது பரபரப்பு புகார் ஒன்று வெளியானது. மும்பை ஜுஹூ பகுதியில் சோனு சூட்டிற்கு சொந்தமாக 6 மாடிகளைக் கொண்ட ஓட்டல் ஒன்று உள்ளது. குடியிருப்பு பகுதியை எவ்வித அனுமதியும் இன்றி ஓட்டலாக மாற்றியதாக சோனு சூட்டிற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஓட்டலை இடிக்கும் முயற்சியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட, சோனு சூட் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த நமீதா... காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்... பரபரப்பு போட்டோஸின் பின்னணி என்ன?

இந்த மனு  விசாரணைக்கு வந்தபோது குடியிருப்பு பகுதியை சோனுசூட் 24 அறைகள் கொண்ட ஓட்டலாக மாற்றி இருப்பதாக மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு சோனு சூட் தரப்பில் ஆஜரான வக்கீல் ஓட்டலுக்கு அனுமதி கோரி, கடலோர ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஓட்டலை மாநகராட்சி இடிக்க 2 நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.