ஜிவி பிரகாஷ் மற்றும் சென்சேஷனல் நடிகையான கயாடு லோகர் நடிப்பில் தற்போது இம்மார்ட்டல் என்ற படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

GV Prakash, Kayadu Lohar's 'Immortal' First Look is Amazing! ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என சகலகலா வல்லவனாக கலக்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 'கிங்ஸ்டன்' என்ற படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார்.

இம்மார்ட்டல்:

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் 'இம்மார்ட்டல்' என்ற புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா என்பவர் இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, இளைஞர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கயாடு லோகர்

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகையான கயாடு லோகர் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் 'டிராகன்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கும் நடிகையாக மாறினார். அதனை அடுத்து இவர் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். தற்போது 'இம்மார்ட்டல்' படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

'இம்மார்ட்டல்' படத்தின் ஒளிப்பதிவாளராக அருண் கிருஷ்ணர், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை அடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக, ஜிவி பிரகாஷ் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மெண்டல் மனதில்' படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் சில படங்களுக்கு இசை அமைப்பும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அட்கிலீ' படத்திற்கும் ஜீவி தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.