குலு குலு படத்தில் கைவைத்த சென்சார் போர்டு... கடுப்பான இயக்குனர் ரத்னகுமார்

குலு குலு திரைப்படத்தின் காட்சியை சென்சார் போர்டு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் நீக்கி உள்ளதற்கு இயக்குனர் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Gulu Gulu director Rathnakumar angry about censor board

வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, அவர் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் ஆடை. அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்தார்.

இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்த ரத்னகுமார், அவர் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார். இதன்பின்னர் ரத்னகுமார் இயக்கிய திரைப்படம் தான் குலு குலு. சந்தானம் நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... மாஸ் லுக்கில் ராக்கி பாய்... கிளாஸாக வந்த ரிஷப் ஷெட்டி! பிரதமர் மோடியை சந்தித்த KGF மற்றும் காந்தாரா ஹீரோஸ்

Gulu Gulu director Rathnakumar angry about censor board

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தற்போது குலு குலு திரைப்படத்தின் காட்சியை சென்சார் போர்டு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் நீக்கி உள்ளதற்கு இயக்குனர் ரத்னகுமார் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

குலு குலு படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இந்திய பிரதமர் என குறிப்பிடப்படும் ஒரு காட்சியை சென்சார் போர்டு அதிகாரிகள் எந்தவித விளக்கமும் இன்றி நீக்கி உள்ளனர். இதுகுறித்து ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஜனநாயகத்தில் கலை என்பது முக்கியமான தூண். அத்தகைய கலை மீது சென்சார் போர்டு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில் இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஜவானில் ‘ரோலெக்ஸ்’ மாதிரி செம்ம மாஸான கேமியோ ரோல்... விஜய் நோ சொன்னதால் பிரபல மாஸ் நடிகரை தட்டிதூக்கிய அட்லீ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios