கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் எனப்படும் பெப்சியைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

திடீர் என வேலை இழந்து தவித்து வரும், திரையுலகை சார்ந்த தொழிலாளர்களுக்கு, விஜய் , அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெரிய நடிகர்கள் முதல், வளர்த்து வரும் நடிகர்கள் என பலர் தானாக முன் வந்து உதவிகள் செய்து வந்தனர்.

இப்படி கிடைத்த உதவிகளை வைத்து, 50 நாட்களை கடந்து விட்டதாகவும், இப்படி ஒரு நிலை தொடர்ந்தால், கொரோனாவில் இருந்து தப்பித்து, பசியால் தொழிலாளர்கள் இறக்க கூடும் என கடந்த வாரம், பெப்சி அமைப்பின் தலைவரும், பிரபல இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்து, முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

மேலும் செய்திகள்:  கொசுவலை போல் ஆடை... முன்னழகில் ஹாட்..! குட்டி உடையில் வெறித்தன போஸ் கொடுத்த யாஷிகா!
 

அதில், சில தொழில் நிறுவனங்களுக்கு தளர்வு ஏற்படுத்தியது போல், திரையுலகில் சமூக விலகலை கடைபிடித்து செய்ய கூடிய வேலைகளுக்கும் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி, தற்போது படத்தொகுப்பு, டப்பிங், கிராபிக்ஸ் பணிகள், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகள் மே 11 ஆம் தேதி முதல் துவங்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவித்து, சின்னத்திரை மாற்று வெள்ளித்திரைக்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்:  குழந்தை முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சஞ்சீவ் - ஆலியா... வைரலாகும் குட்டி பப்பு க்யூட் கிளிக்...
 

இந்த தகவல் திரையுலகை சேர்ந்தவர்கள் மனதில் பாலை வார்த்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று பலர் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும்,