'ராஜா ராணி' சீரியலில் கணவன் மனைவியாக இணைந்து நடித்து, பின் உண்மையாகவே காதலித்து, திருமணம் செய்து கொண்டவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி. இவர்களுக்கு குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகும் நிலையில் தற்போது முதல் முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர்.

இணைந்து நடிப்பவர்களை உண்மையாகவே, வாழ்க்கையிலும் இணைத்து, அழகு பார்த்து வரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். 

இவருக்கு நாயகனாக, தமிழில் "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சீரியல் நாயகனாக சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை துவங்கினார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகை!
 

அப்பாவி வேலைக்கார பெண்ணாக நடித்த செம்பா, மனதை இந்த சீரியல் மூலம் கவர்ந்தார் சஞ்சீவ். இதன் பின் அங்கும், இங்கும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். ஆரம்பத்தில் எப்போதும் போல், காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என மறுத்தாலும், பின் தங்களுடைய காதலை ஒப்புக்கொண்டனர்.

மிக பிரமாண்டமாக நடந்த விருது விழா ஒன்றில், மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள், திருமணத்தை மட்டும் எளிமையாக செய்துகொண்டனர். பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்ததை தொடர்ந்து இப்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையே பிறந்து விட்டது.

தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். இதுவரை குழந்தையின் கைகளை மட்டுமே வெளிக்காட்டிய இந்த தம்பதி முதல் முறையாக, தங்களுடைய அழகிய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த கியூட் தேவதையின் புகைப்படத்தை பார்த்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: திடீர் உடல்நல குறைவு... பிக்பாஸ் சீசன் 2 நடிகை மருத்துவமனையில் அனுமதி!