பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, பிக்பாஸ். அங்கு கிட்ட தட்ட 12 சீசன்களை கடந்து விட்டாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்போது தான் இரண்டு மற்றும் 3 ஆவது சீசன்களை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில், தமிழில் சில எதிர்ப்புகளை சந்தித்தாலும், உலக நாயகனின் சமயோதியமான பேச்சு, நேர்த்தியான கேள்விகள் இந்த நிகழ்ச்சியை ரசிக்க வைத்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் ஆதரவை பெற்றால், திரையுலக பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் பட வாய்ப்புகளும் கிடைக்கும். இதன் காரணமாகவே இதில் கலந்து கொள்ள பலர் போட்டி போடுகிறார்கள்.

ஆனால் தமிழில் பிக்பாஸ் செண்டிமெண்ட் சிலருக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகிறது. ஓவியா, ஆரவ், ரித்விக்கா, முகேன் ஆகியோருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று, பிக்பாஸ் டைட்டில் வென்ற போதிலும் திரைப்படங்களில் இதுவரை எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: குழந்தை முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சஞ்சீவ் - ஆலியா... வைரலாகும் குட்டி பப்பு க்யூட் கிளிக்...
 

மருத்துவமனையில் பிக்பாஸ் நடிகை:

ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது, இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடியவர் சம்பவானா. பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். மேலும் மாடலாகவும், டான்சராகவும் இருந்து வருகிறார்.

இவர் கடந்த திங்கள் கிழமை அன்று, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து இவர் டிஸ்சார்ஜ் ஆகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், மீண்டும் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய கணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகை!
 

அவரின் பதிவு இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sambhavna Seth (@sambhavnasethofficial) on May 4, 2020 at 11:16pm PDT