சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா. 

அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.  இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம். ரேஷ்மா பசுபலேட்டி பிரபல நடிகர் பாபி சின்ஹாவின் உறவினருமாவார். 

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட தனது முதல் திருமணத்தில் தோல்வியடைந்த ரேஷ்மா, அமெரிக்காவில் வசிக்கும் போது மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனியே வசித்து வந்த ரேஷ்மா. தற்போது மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்: திடீர் உடல்நல குறைவு... பிக்பாஸ் சீசன் 2 நடிகை மருத்துவமனையில் அனுமதி!
 

ரசிகர்களால்  குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட  ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.  பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார். அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார். அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: மருந்து கடையில் மது விற்குமா? நக்கலடித்தவருக்கு நச் பதிலடி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!
 

தற்போது கொரோனா பிரச்சனை ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைத்தும் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதே சமயத்தில் பொழுபோக்குவதற்காக டிக்-டாக்கில் இணையும் பிரபலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அப்படி பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள கவர்ச்சி டிக்-டாக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது.  

இதை தொடர்ந்து, பிக்பாஸ் ரேஷ்மா முதல் முறையாக தன்னுடைய, மகனை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ரேஷ்மாவிற்கு அவருடைய மகன் காபி போட்டு கொடுக்கிறார். அவரை அனைவருக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்றும், அவர் பெயர் ராகுல் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்:ஆலியா பட்-ஐ நடிக்க வைத்தது ஏன்? ரகசியத்தை வெளியிட்ட ராஜமௌலி..!
 

மேலும் இரண்டு நாட்கள் கடினமாக இருந்ததாகவும், தன்னுனடய மகன் காபி போட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து, மகிழ்வித்ததாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் உச்ச கட்ட கவர்ச்சியில் அமர்ந்திருக்கும் ரேஷ்மாவிற்கு , முடிந்த வரை மகன் முன்பு நல்ல முறையில் உடை அணியுங்கள் என ஒருவர் அறிவுரை கொடுத்துள்ளார். ஆனால் ரேஷ்மா அமெரிக்கா வாழ்க்கை முறையில் இதெல்லாம் ரகஜாம் என பதில் கொடுத்துள்ளார்.

வைரலாகி வரும் வீடியோ இதோ..