இத்தனை நாட்கள், தலை தூக்கி இருந்த கொரோனா பிரச்னையை மிஞ்சி விட்டது, திரும்பவும் மது கடைகளை அரசு திறந்தது. கிட்ட தட்ட 40 நாள் ஊரடங்கிற்கு பின், மீண்டும் மதுவை பார்த்த குடிமகன்களுக்கு ஒரே கும்மாளமாக அமைந்தது இன்று.

இந்த நிலையில் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், கையில் பாட்டில் மாதிரி ஏதோ வைத்து கொண்டு நடந்து வந்த வீடியோ வெளியானது.

இதை பார்த்து நெட்டிசன் ஒருவர், ஊரடங்கு நேரத்தில்... ரகுல் ப்ரீத் சிங் மது பாட்டில் வாங்கி செல்கிறார் என நக்கலடித்தார். இதை பார்த்து கடுப்பான ரகுல், மருத்து கடையில் தான் மது கிடைக்கிறதா என நச் பதிலடி கொடுத்தார்.

மேலும் இவரின் ரசிகர்கள் பலர், ரகுல் மருத்து கடையில் இருந்து தான் வருகிறார். பார்ப்பவர்கள் நல்ல எண்ணத்தோடு பார்க்க வேண்டும் என நாயகிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதே நேரத்தில் இப்படி நக்கலடித்தவர்களுக்கு எதிர் பதிலாக அப்படியே மது வாங்கி சென்றாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை, அவர் பணத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அது அவரது உரிமை என ரகுலுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.