தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2 . இதன் முதல் பாகம் வெளியாகி சரமாரியான சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகம் அதே விறுவிறுப்போடு தயாரானது. 

பிரபாஸ், தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் இந்திய சினிமாவையும் கடந்து உலக அளவில் ஏராளமான சாதனைகளை படைத்தது. உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ஆயிரத்து 810 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இந்த படத்தை தொடர்ந்து தற்போது... கோமராம் பீம் , மற்றும் அல்லு சித்தராம ராஜு, ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார் ராஜமௌலி. 

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கான், சமுத்திர கனி, உள்ளிட்ட பலர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் பிரபல, பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஏன்? ஆலியா பட்-ஐ கமிட் செய்தீர்கள் என இயக்குனர் ராஜ மௌலியிடம் கேள்வி எழுப்ப பட்டதற்கு பதில் அளித்துள்ள அவர்,  ராம் சரண், ஜுனியர் என்டிஆர்., என இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டு நடிக்க ஒரு நடிகை தேவைப்பட்டார். அதே நேரத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் அப்பாவித்தனமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். இதற்கு ஆலியாவின் முகம் கட்சிதமாக பொருந்தியது எனவே அவரை தேர்வு செய்ததாக தெரிவித்து, இந்த படத்தில் ஆலியாவின் கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.