Gold Teaser : பிரேமம் ' இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படமான ' கோல்ட் ' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த பிரேமம் :

நிவின் பவுலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம் (Premam). கடந்த 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமான இதை அல்போன்சு புத்திரன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

 இயக்குனர் அல்போன்ஸின் அடுத்த படைப்பு :

'பிரேமம் ' இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படமான ' கோல்டு கடந்தாண்டு செப்டம்பரில் ' படத்தின் வேலைகளை தொடங்கினார். பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமான இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகின.

பிருத்விராஜ் புரொடக்ஷன் தயாரிப்பு :

'கோல்டு' படத்தை பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸின் சுப்ரியா மேனன் மற்றும் மேஜிக் பிரேம்ஸின் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயரித்துள்ளனர் . முன்னதாக படத்தின் பூஜை விழாவில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், மனைவி அலீனா, நடிகர் கிருஷ்ண சங்கர், பிருத்விராஜ் சுகுமாரனின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான மல்லிகா சுகுமாரன், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

 நயன்தாராவுடன் முதல் முறையாக பிருத்விராஜ் : 

அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் முத்த முறையாக பிருத்விராஜ் கூட்டணி அமைத்துள்ள இந்த படம் மூலமா சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிருத்விராஜ் முதல் முழு நீளப் படத்தில் நடித்துள்ளார். இருவரும் முன்பு 2008 பிளாக்பஸ்டர் திரைப்படமான '20:20' இல் ஒரு பாடல் காட்சிக்காக திரையைப் பகிர்ந்து கொண்டனர்.

நயன்தாராவுக்கு மலையாளத்தில் குவியும் வாய்ப்புகள் :

சமீபத்தில் வெளிவந்த நிழல்' படத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து 'கோல்டு'. இவ்வாறு நயன்தாரா தொடர்ந்து மலையாள படங்களில் ஒப்பந்தம் செய்து வருவது கேரளாவில் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..நயன்தாராவுடன் சென்னை மேயர் பிரியா..! இணையத்தை கலக்கும் ‘திடீர் கூட்டணி’..!

கோல்டு டீசர் :

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்திலிருந்தது டீசர் வெளியாகியுள்ளார். அதில் பிருத்விராஜின் அதிரடி சண்டை காட்சிகள் ஸ்லோ மோஷனில் கட்டப்பட்டுள்ளது. பின்னனியில் மாஸ் பிஜியமுடன். இவரை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் சோபாவில் சோலாவாக அமர்ந்து பாப் கார்ன் உண்டபடி கிக் லுக் விடும் காட்சிகளும் உள்ளன. 

YouTube video player