- Home
- Cinema
- நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Nayanthara : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர்.

7 வருட காதல்
அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா என கோலிவுட்டில் ஏராளமான காதல் ஜோடிகள் இருந்தாலும், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஜோடி என்றால் அது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான். கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
லிவிங் டுகெதர்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன் தாரா கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், காதலனுடன் அவ்வப்போது வெளியே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கோவில்களுக்கு திடீர் விசிட்
கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் கோவில்களுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். கடந்த வாரம் புதிதாக இன்னோவா கார் ஒன்று வாங்கிய இந்த ஜோடி, சென்னையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு புது காரில் சென்று பூஜை போட்டு தரிசனம் செய்துவிட்டு வந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகின.
காளிகாம்பாள் கோவிலில் தரிசனம்
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர். அந்த சமயத்தில் சென்னை மேயர் பிரியா ராஜனும் கோவிலுக்கு வர, அவருடன் சேர்ந்து நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.
நயன்தாரா நெற்றியில் குங்குமம்
இந்நிலையில், அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கையும் கொடுத்துள்ளது. ஏனெனில், அந்த புகைப்படத்தில் நடிகை நயன்தாரா, நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இருவருக்கும் நிச்சயமானதை ரகசியமாக வைத்திருந்த நயன்தாரா, நெற்றிக்கண் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது தான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் விரைவில் அவர் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளது. அப்போது அவர் திருமணம் குறித்து விளக்கம் அளிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Valimai Box Office: இரண்டு வாரங்களை கடந்தும் மவுஸு குறையாத அஜித்தின் வலிமை....சென்னையில் மாஸ் காட்டும் வசூல்.!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.