பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன ஒழுங்காக நடக்கிறதோ இல்லையோ , விளம்பரம் மட்டும் சரியாக நடக்கிறது. வாரா வாரம் ஏதாவது ஒரு படக்குழுவினர், பிக் பாஸ் வீட்டினுள் பிரமோஷனுக்காக வருவது தற்போது வழக்கமாகி இருக்கிறது. போன முறை கடைக்குட்டி சிங்கம் பட குழுவினர் பிக் பாஸ் வீட்டினுள் வருகை புரிந்தனர்.

இம்முறை ஆர்யாவின் கஜினிகாந்த் படக்குழுவினர் இந்த பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்திருக்கின்றனர். ஆர்யா மட்டுமல்ல கூடவே விஜய் டிவி புகழ் டிடியும் நுழைந்திருக்கிறார். டிடி எங்கு இருந்தாலும் அங்கே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. கைகலப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டில், இம்முறை கொஞ்சம் கலகலப்பு தோன்ற போகிறது இவர்களின் வரவால்.

ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் நகைச்சுவை திரைப்படமான, கஜினிகாந்த் படத்தின் பிரமோஷனுக்காக வந்திருக்கும் இக்குழுவில் அப்படத்தின் நாயகி சாயிஷா, காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தவர் சதீஷ்.அவர் இங்கு வந்திருப்பது கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.

#GhajinikanthTeamInBiggBoss #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/BuqwbT5si2

— Vijay Television (@vijaytelevision) August 3, 2018

இவர்களின் வருகையால் பிக் பாஸ் வீடே கலகலப்பாகி இருக்கிறது. சதீஷ் வேறு தன் பங்கிற்கு போட்டியாளர்களை கலாய்த்திருக்கிறார். பிரமோவே இப்படி என்றால், ஷோ இன்னும் ஒருபடி மேலே தானே இருக்கும்.